
ரிவால்வர் ரீட்டா விமர்சனம் | Revolver Rita review
டிராகுலா பாண்டியன் எனும் பெரிய ரெளடி, ரீட்டாவின் வீட்டில் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். டிராகுலா பாண்டியனின் பிணத்தைக் கைப்பற்ற நினைக்கும் மார்டின் குழு, டிராகுலா பாண்டியனின் தலைக்காகக் காத்திருக்கும் ஆந்திர ரெட்டி, தந்தைக்காக எதையும் எந்த எல்லைக்கும் போய்ச் செய்யும் அவரது மகன் டிராகுலா பாபி, ரீட்டாவைப் பழிவாங்கச் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கும் ஒரு காவலதிகாரி ஆகியோரிடமிருந்து ரீட்டா எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
சீட்டாவாகப் பேசிக் கொண்டே இருக்கும் ரெடின் கிங்ஸ்லியின் தொல்லை பொறுக்க முடியாமல், அவரைக் குளியல் அறையில் வைத்துப் பூட்டி விடுகின்றனர். பூட்டப்பட்ட குளியலறையில் இருந்து ரெடின் கிங்ஸ்லி வெளியேறுவது ரசிக்க வைக்கிறது. ப்ரோக்கர் லல்லுவாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தியின் மாடுலேஷன் அவரேற்ற கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. கொடூரமான சைக்கோ டிராக...

