Shadow

Tag: Russo bothers

சீட்டடெல் – லண்டன் ப்ரீமியர்

சீட்டடெல் – லண்டன் ப்ரீமியர்

OTT, Web Series
ஏப்ரல் 28 ஆம் தேதி ப்ரைம் வீடியோவில், ஒரு பிரம்மாண்டமான உலக அரங்கேற்றத்திற்கு அமேசான் ஒரிஜினல் தொடர் சீட்டடெல் -இன் ஒற்றர்கள் தயாராகி வரும் நிலையில், முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா, ஜோனாஸ் மற்றும் ஸ்டான்லி துச்சி, லெஸ்லி மான்வில்லே ஆகியோர் தங்களது உலகளாவிய சுற்றுப்பயணத்தின் நடுவே நிர்வாக தயாரிப்பாளர்களான ஜோ மற்றும் அந்தோனி ருஸ்ஸோ மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் ஆகியோருடன் இணைந்து லண்டன் ப்ரீமியரில் பங்கு பெற்றனர். அதிரடிக் காட்சிகள் நிறைந்த ஸ்பை யூனிவர்சின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகளான ராஜ் & டிகே மற்றும் சீட்டடெல் இந்திய வெளியீட்டின் இணை எழுத்தாளர் சீதா ஆர்.மேனன் ஆகியோருடன் சேர்ந்து வருண் தவான், சமந்தா ரூத் பிரபு உட்பட அனைத்து உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் அவர்களோடு, இத்தாலிய வெளியீட்டிலிருந்து முன்னணி எக்ஸிக்யூ...
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் விமர்சனம்

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சூப்பர் வில்லன் (!?) தானோஸின் ஒரே ஒரு சொடுக்கினால் கரைந்து போன பாதிக்கும் மேற்பட்ட மனித இனத்தை மீட்க, எஞ்சியிருக்கும் அவெஞ்சர்ஸ் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர். இறுதியில் சூப்பர் ஹீரோகளுக்கே வெற்றி! முடிவு சுபம் தான் எனினும், அந்த வெற்றியை அடைய அவர்கள் மேற்கொள்ளும் அந்த உணர்ச்சிகரமான பயணம், இந்தப் படத்தைத் திரையுலக வரலாற்றின் மிக முக்கியமான படமாக உயர்த்துகிறது. ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில், சூப்பர் ஹீரோ படம் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது என்றே சொல்லவேண்டும். அவெஞ்சர்ஸில் சிலர் அதி சக்தி படைத்தவர்கள், சிலர் மிகவும் புத்திசாலிகள், சிலர் நவீன உபகரணங்களுடன் தங்கள் பராக்கிரமத்தை உயர்த்திக் கொண்டவர்கள். அவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு புள்ளி என்றால், ஒரு குடும்பமாக இணைந்து உலகைக் காக்கவேண்டுமென்ற அவர்களது எண்ணமே. எத்தனை புரிதலின்மைகள் உருவாகி உரசிக் கொண்டாலும், இறுதியில் ஒற்ற...