சதுரங்கவேட்டை – 2 இல் அரவிந்த்சாமி
2014ஆம் ஆண்டு, H.வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் "சதுரங்கவேட்டை". அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமியும், த்ரிஷாவும் நடிக்க, சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய H.வினோத் சதுரங்கவேட்டை 2 படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுத, சலீம் படத்தை இயக்கிய N.V.நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் பாகத்தையும், மனோபாலாவின் ‘மனோபாலா பிக்சர் ஹவுஸ்’ தான் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது.
நம்மைச் சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையைப் பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் வியக்கும்படியும் "சதுரங்கவேட்டை" படத்தில் கூறியிருந்தார்கள்.
முற்றிலும் தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளைப் பற்றி விவரித்தது சதுரங்கவேட்டை திரைப்படம். தற்போது தினம் தினம் மெருகேறி வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நகரவாழ் ...