Shadow

Tag: Sandyman power story

பிக் பாஸ் 3: நாள் 87 – முடிவே இல்லாத சாண்டிமேனின் பவர் ஸ்டோரி

பிக் பாஸ் 3: நாள் 87 – முடிவே இல்லாத சாண்டிமேனின் பவர் ஸ்டோரி

பிக் பாஸ்
‘வரவா வரவா’ பாடலுடன் தொடங்கியது நாள். எல்லோருக்கும் காலில் பிரச்சினை இருக்கும் போல. முகினைத் தவிர யாரும் ஆடவில்லை. தனது பவர் சாண்டிமேன் கதையை மறுபடியும் சொன்னார். இந்தத் தடவை சாண்டி பாட்டி வேசத்தில் இருக்கார். அத்தியாயத்தை ஒப்பேற்ற கன்டென்ட் இல்லாமல், மொக்கையாகப் பேசினதை எல்லாம் போட்டுக் கொண்டுள்ளனர். இதில் எங்கே இருந்து எழுதுவது? இதுவே வனிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? சொக்கத்தங்கத்தை வெளியே அனுப்பிட்டீங்களேய்யா? டாஸ்க் வரும் வரும் என எல்லோரும் காத்துக் கொண்டிருக்க, லிவிங் ஏரியாவில் மறுபடியும் பவர்சாண்டிமேன் கதையைச் சொல்ல, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பிக் பாஸ், ‘பவர் கொடுத்தா மட்டும் பத்தாது, மைக்கை ஒழுங்கா மாட்டு’ என சாண்டியைக் கலாய்த்தார். வெடிச்சிரிப்பு. முகின் தன்னோட பாட்டை மறுபடியும் பாடினார். முடித்த உடனே "அய்யா, முகின், கன்ஃபெஷன் ரூமுக்கு வர்றீங்களாய்யா?” என பிக் பா...