Search

பிக் பாஸ் 3: நாள் 87 – முடிவே இல்லாத சாண்டிமேனின் பவர் ஸ்டோரி

bigg-boss-3-day-87

‘வரவா வரவா’ பாடலுடன் தொடங்கியது நாள். எல்லோருக்கும் காலில் பிரச்சினை இருக்கும் போல. முகினைத் தவிர யாரும் ஆடவில்லை.

தனது பவர் சாண்டிமேன் கதையை மறுபடியும் சொன்னார். இந்தத் தடவை சாண்டி பாட்டி வேசத்தில் இருக்கார். அத்தியாயத்தை ஒப்பேற்ற கன்டென்ட் இல்லாமல், மொக்கையாகப் பேசினதை எல்லாம் போட்டுக் கொண்டுள்ளனர். இதில் எங்கே இருந்து எழுதுவது? இதுவே வனிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? சொக்கத்தங்கத்தை வெளியே அனுப்பிட்டீங்களேய்யா?

டாஸ்க் வரும் வரும் என எல்லோரும் காத்துக் கொண்டிருக்க, லிவிங் ஏரியாவில் மறுபடியும் பவர்சாண்டிமேன் கதையைச் சொல்ல, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பிக் பாஸ், ‘பவர் கொடுத்தா மட்டும் பத்தாது, மைக்கை ஒழுங்கா மாட்டு’ என சாண்டியைக் கலாய்த்தார். வெடிச்சிரிப்பு.

முகின் தன்னோட பாட்டை மறுபடியும் பாடினார். முடித்த உடனே “அய்யா, முகின், கன்ஃபெஷன் ரூமுக்கு வர்றீங்களாய்யா?” என பிக் பாஸ் முகினை அழைத்தார். நேற்று, ‘கொஞ்சம் பாசமா கூப்பிடுங்க பிக் பாஸ்’ என முகின் சொன்னதால் இந்த ட்ரீட்மென்ட்.

ஃபைனல் டிக்கெட்டுக்கு 5வது டாஸ்க். 3 வட்டங்கள், 3 ரவுண்டு. ஒவ்வொருத்தரும் தன் முதுகுக்குப் பின்னாடி ஒரு தெர்மாக்கோல் மூட்டையைக் கட்டிக் கொள்ளவேண்டும். அந்த வட்டத்தைச் சுற்றி ஓடிக் கொண்டே தன் முன்னாடி ஓடுபவர்கள் மூட்டையில் இருந்து தெர்மாக்கோல் பந்துகளை விழ வைக்கவேண்டும். மூட்டை காலியாகிவிட்டது என்றால், அவர்கள் போட்டியில் இருந்து வெளியே போய்விடுவார்கள். எந்த வரிசையில் ஓடவேண்டுமென சீட்டு எடுத்து முடிவு செய்தனர்.

சேரன் முதல் இடமும், லாஸ் 7 வது இடமும். சேரனால் லாஸைப் பிடிக்க முடியவில்லை. அவரால் ஓடவும் முடியவில்லை. மூச்சு வாங்க சீக்கிரம் வெளியே வந்துவிட்டார். இரண்டாவதாக வெளியே வந்தது மறுபடியும் தர்ஷன் தான். அவனுக்குப் பின்னாடி வந்த கவின், ‘சரியாக விளையாடலை’ என சண்டையும் போட்டார்.

அடுத்ததாக ஷெரின், சாண்டி, வெளியே வர, முகின் தான் இதிலேயும் வின்னர். சீட்டு எடுப்பதில், கவினும் லாஸும் சீட்டை மாற்றிக் கொண்டார்கள் என ஒரு சர்ச்சை ஓடுகிறது.

எல்லோருமே மூச்சு வாங்கப் படுத்துக் கிடந்தார்கள். டாஸ்க் முடிந்த உடனே, மறுபடியும், கவினுக்கும் தர்ஷனுக்கும் விவாதம் வந்தது. அது அப்படியே சண்டைக்குப் போக இருந்த ஸ்டேஜில் சாண்டி உள்ளே புகுந்து இரண்டு பேரையும் ஆஃப் பண்ணிவிட்டார். அப்பவும் லாஸ் கவினுக்கு சப்போர்ட் பண்ணினதைச் சொல்லவும் வேண்டுமா என்ன?

அடுத்த டாஸ்க், ‘சீ சா’ பசில் மாதிரி தன் உருவம் பதிக்கப்பட்ட தெர்மாக்கோல் பகுதிகளை ஒன்றாகச் சேர்த்து மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளவேண்டும். எல்லோரும் டார்கெட் பண்ணினது ஷெரினையும் முகினையும் தான். சேரன், சரியாகச் சேர்த்துக் கொண்டு, அதை ரொம்ப நேரம் காப்பாற்றிக் கொண்டிருந்தார். கவினும் அப்படியே தான் இருந்தார். கடைசி கட்டத்தில் கவின் சேர்த்து வைத்ததை அடிக்க, சேரன் முதல் இடம் வந்தார்.

எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க நைட் 1 மணிக்கு லைட்டைப் போட்டார் பிக் பாஸ். தர்ஷனை எழுப்பி கன்ஃபெஷன் ரூமுக்கு வரச் சொன்னவர், அந்நேரத்துக்கு ஒரு டாஸ்க்கைக் கொடுத்து அனுப்பினார். லான்ல ஒவ்வொருவருக்கு ஒரு தங்கமுட்டை. அதை இடத்தை விட்டு நகர்த்தாமல், பக்கத்துலேயே உட்கார்ந்து பார்த்துக் கொள்ளவேண்டும். அடுத்தவர்கள் உடைத்துவிட்டால் இவர்கள் அவுட், உடைக்கும் போது பார்த்துவிட்டால் அவர்கள் அவுட்.

2 மணிக்கு டாஸ்க் ஆரம்பித்தது. விடிய விடியப் போய்க் கொண்டே இருந்தது. அதிலேயும் தர்ஷனும் சாண்டியும், மற்றவர்கள் முட்டையை எப்படி உடைக்கலாம் என பிளான் பண்ணிக் கொண்டிருந்தனர்.

ஷெரின் தங்க முட்டையை சாண்டி உடைக்கப் போக, அதை அங்கேயே இருந்த ஷெரின் பார்த்துவிட்டார். ஆனால் சாண்டி அவுட் என பிக் பாஸ் சொல்லவே இல்லை.

டாஸ்க் ஓக்கே தான். ஆனால் பாத்ரூம் கூடப் போகமுடியாத அளவுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தால் நல்லாவா இருக்கு? அட்லீஸ்ட் ஹவுஸ்மேட்ஸ் ஒன்றாகச் சேர்ந்து முடிவு பண்ணி பாத்ரூம் போய்விட்டு வந்துவிடலாம். இருந்தாலும் போன சீசனில் ஒரு கார் டாஸ்க் கொடுத்தாங்களே! அந்த அளவுக்கில்லை.

இன்னிக்கும் அது தொடரும் போல.

மகாதேவன் CM