Shadow

Tag: Sangili Bungili Kadhava Thorae movie review

சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாளிகை போன்ற வீட்டுக்குள் இருக்கும் பாசக்கார ஆவி, 'இது என்னோட வீடு' என அவ்வீட்டினை விலைக்கு வாங்கும் ஜீவாவையும் அவரது குடும்பத்தினரையும் உள்ளே விட மாட்டேங்கிறது. எப்படி ஆவியை ஜீவா விரட்டுகிறார் என்பதுதான் படத்தின் கதை. வழக்கமான பேய்க் கதை என்ற பொழுதிலும், இயக்குநர் ஐக் அழகாகச் சுவாரசியப்படுத்தியுள்ளார். உதாரணத்திற்கு, படம் தொடங்குவதற்கு முன், குடிப்பழக்கும் புகை பழக்கமும் உடம்பிற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற வாசகத்தை 'நான் கடவுள்' ராஜேந்திரன் குரலில் கேட்கும் பொழுதே, படத்திற்கான மூடை செட் செய்து விடுகிறார். வாடகை வீட்டில் குடியிருப்போரின் வலியை அழகாகப் பதிவு செய்துள்ளனர். "வாடகை வீட்டில் இருப்பது ஜெயில் போல" என ராதிகா வலியுடன் சொல்வதில் இருந்து தான் படமே தொடங்குகிறது. நாயகனான ஜீவாவின் பெயர் போடுவதர்கு முன்பே 'டத்தோ' ராதாரவியின் பெயர் திரையில் தோன்றுகிறது. குடும்பம் என்றால் ஒற்றுமையாக...