ஜெயம் ரவி – ஸ்கிரீன் சீனில் 3 படம்
மாஸ் படங்களில் நடித்து கைத்தட்டல்களையும், விசில் ஒலியையும் பெறும் அதே நேரத்தில், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருந்து பாராட்டுகளையும் பெறுகிறார் ஜெயம் ரவி. அவரது அசுர வளர்ச்சி ஒரு புறம் இருக்க, அவர் தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்பும் நடிகராகவும் இருக்கிறார். இதற்கு மிகச்சரியான உதாரணம் என்னவென்றால் ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் 3 திரைப்படங்களில் நடிக்க ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்திருக்கிறது.
"நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களைத் தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் பேரார்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் உண்மையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு வரம். தமிழ் சினிமாவின் என் நண்பர்கள் யாராவது இந்த மாதிரி 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நான் மகிழ்ச்ச...