சேதுபதி விமர்சனம்
'போலிஸ் வேலை தான் கெத்து. யாரையும் அடிக்கலாம்' என்பான் நானும் ரெளடிதான் பாண்டி. அதே போலொரு ஆள் தான் சேதுபதியும். பொதுப்புத்தியில் உறைந்து விட்ட நியாய தர்மங்கள் மட்டுமே சரியென்று நம்பி, அதைப் பிடிவாதமாகக் கடைபிடிக்கும் நல்ல (!?) போலிஸ்.
அது எத்தகைய தர்மம் என்றால்? எய்தவனுக்கு நீதிமன்றம், எய்யப்படும் அடியாட்களுக்கு எவ்விதக் கேள்வியுமின்றி என்கவுண்ட்டர் என்பதே அது. அப்படியான தர்மத்தை வழுவாத நேர்மையான போலிஸ் சேதுபதி. பாதிக்கப்பட்டோரைக் கண்டால் மனம் இரங்கும் ஈரமனசுக்காரர். இப்படிப்பட்டவரை உரண்டைக்கு இழுத்து படாதபாடுபடுகிறார் Dr.வாத்தியார்.
வாத்தியாராக எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். தமிழ் சினிமா பலமுறை கண்டுவிட்ட மிகக் கொடுமையான வில்லன். கதாபாத்திரத்திற்கேற்ற தோரணையான நடிகரெனினும், அசுவாரசியமற்ற கதாபாத்திர வடிவமைப்பால் பொலிவிழுந்து போகிறார். ஒரு போலிஸ்காரரை எரித்துக் கொன்றுவிட்டு,...