Shazam! Fury of the Gods விமர்சனம்
டிசி காமிக்ஸின் ஷசாம் எனும் படம், 2019 இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பில்லி பேட்ஸன் எனும் பதின்ம வயது சிறுவனுக்கு எதிர்பாராதவிதமாக, சூப்பர் ஹீரோவாகும் மந்திர சக்தி கிடைக்கிறது. பதின்ம வயது மனத்துடன் ஒரு சூப்பர் ஹீரோ உலகத்தைக் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் மையக்கரு.
முதற்பாகத்தில், தத்தெடுக்கப்படும் புதிய குடும்பத்தில் தன்னை ஓர் அங்கமகாக இணைத்துக் கொள்ளாமல், தன் பெற்றோரைத் தேடியவண்ணமே இருப்பான் பில்லி. இப்படத்தில், ‘குடும்பம்தான் எல்லாம்’ என தத்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மீது அதீத பாசத்தோடு இருக்கிறான் பில்லி. விரைவில் பதினெட்டு வயது எட்டப் போகும் தன்னைக் குடும்பத்தை விட்டு அனுப்பிவிடுவார்களோ, மீண்டும் குடும்பத்தைப் பிரியவேண்டுமோ என கவலையிலே உள்ளான் பில்லி.
ஷசாம் படத்தின் அழகே, சிறுவன் பில்லி தனக்குக் கிடைக்கும் சக்திகளைத் தன் சகோதர சகோதரிகளுக்குப் பகி...