Shadow

Tag: Shoot the kuruvi review

ஷுட் த குருவி விமர்சனம்

ஷுட் த குருவி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மார்ச் 18 ஆம் தேதி அன்று ஷார்ட்ஃப்ளிக்ஸ் எனும் செயலியில் வெளியாகியுள்ளது இக்குறும்படம். குருவிராஜன் எனும் பிரசித்த பெற்ற கொலைகாரனை விளையாட்டாக அறைந்து விடுகிறார் ஷெரிப். குருவி ராஜன் யார், ஷெரிப் யார், குருவி ராஜனிடம் ஷெரிப் சிக்கினானா இல்லையா என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் மதிவாணன். கேஜிஎஃப் பாணியில், கதையை ப்ரொஃபசர் மித்ரன் சொல்வதாகத் தொடங்குகிறது. மித்ரனாக, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, மிரள் முதலிய படங்களில் நடித்திருந்த ராஜ்குமார்.G நடித்துள்ளார். சஸ்பென்ஸைக் கூட்ட அவர் அடிக்குரலில் பேசும் சில வசன்ங்களைக் கவனிக்கச் சிரம்மாம இருந்தாலும், 2டி அனிமேஷனில் விரியும் குருவிராஜனின் கதை நல்லதொரு அடித்தளத்தைப் படத்திற்கு ஏற்படுத்தித் தந்துள்ளது. குருவிராஜனாக அர்ஜெய் நடித்துள்ளார். ‘நான் கேங்ஸ்டர் இல்லை கில்லர்’ என அவர் சொன்னாலும், அவரது பின் கதையும், அவரது தோற்றமு...