
பிளட்ஷாட் விமர்சனம்
பிளட்ஷாட் என்பது வேலியன்ட் காமிக்ஸ் உருவாக்கிய ஒரு சூப்பர் ஹீரோவின் பெயர். ‘பிளட்ஷாட்’ எனும் பிராஜெக்ட்டை உருவாக்கும் RST நிறுவனம், இறந்துவிடும் ஒரு இராணுவ அதிகாரியான ரே கேரிசனுக்குச் செயற்கை உயிரூட்டி, உடலில் நேனைட்ஸ் (Nanites) –ஐச் செலுத்தி விடுகின்றனர். நேனைட்ஸ் அதி வேகத்தில் செயற்பட்டு, பழுதுபடும் உறுப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவல்லது.
ஆனால், ரைஸிங் ஸ்பிரிட் டெக்னாலஜியின் (RST) சி.ஈ.ஓ.வான டாக்டர் எமில் ஹார்டிங், பிளட்ஷாட்டை ஒரு ஆயுதமாக மட்டுமே உருவாக்குகிறார். மனதில் குமுறும் பழிவாங்கும் உணர்ச்சிதான், ஒரு மனிதனை உச்சபட்ச ஆயுதமாக மாற்றும் என்பதால், ரே-வின் மூளையில் ஒரு கதையை விஷுவலாகப் பதிக்கிறார். அதை உண்மையென நம்பும் பிளட்ஷாட், பழிவாங்கும் உணர்ச்சியில் கொதித்து, அவர் மூளையில் பதியப்பட்டிருக்கும் எதிராளியைத் தேடிக் கொல்கிறார். தான் உபயோகிக்கப்படுகிறோம் என ஒரு கட்டத்தில் ...



