Shadow

Tag: Sing Animation Movie Review

சிங் விமர்சனம்

சிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பிக்சார் அனிமேஷன் படங்களில், கதை சொல்லும் முறையில் ஒரு மேஜிக் இருக்கும். பொம்மையோ, காரோ, ரோபோவோ, எலியோ, மீனோ என இப்படி எதுவாக இருந்தாலும், அதை உயிருள்ள கதாபாத்திரங்களாக நம்மை உணரச் செய்து விடுவார்கள். இல்லூமினேஷன் என்டர்டெய்ன்மென்ட், தனதுமினியன்ஸ் எனும் கதாபாத்திர உருவாக்கத்தால், வயது வித்தியாசமின்றி அத்தனை ரசிகர்களையும் தன் பால்கவர்ந்தவர்கள். அவர்கள் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஹிட்டான மினியன்ஸ் படத்திலேயே கூட, பிக்சார் ஏற்படுத்தும் மேஜிக் இல்லாமல் இருந்தது. ஆனால், "சிங் (SING) படத்தில் மாயம் செய்துள்ளனர் இல்லூமினேஷன் என்டர்டெய்ன்மென்ட். பஸ்டர் மூன் எனும் கோலா கரடிக்கு, தன் தியேட்டரில் பிரம்மாண்டமான இசைப் போட்டி நடத்த ஆசை. கையிருப்போ தொள்ளாயத்து சில்லறை மட்டுமே இருக்கிறது. தனது அசிஸ்டென்ட்டான பச்சை ஓனானிடம் 1000 டாலர்கள் பரிசுத் தொகை என அறிவிக்கச் சொல்கிறார். ஆனால், மூதாட்டியான பச்சை ஓனான...