சிறுவன் சாமுவேல் விமர்சனம்
'முதல் கன்னியாகுமரி படம்' என்ற விளம்பரத்துடன், மே 12 ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது. குழந்தைகளின் அக உலகைப் பிரதிபலிக்கும் முதல் தமிழ்ப்படம் என்று கூட இப்படத்தை அடையாளப்படுத்தலாம்.
சிறுவன் சாமுவேல், ஒரு கிரிக்கெட் பேட் வாங்க ஆசைப்படுகிறான். அப்பா சவட்டி (மொத்தி) எடுக்க, சாமுவேல் மனம் நொறுங்குகிறது. ஐநூறு கிரிக்கெட் கார்டுகளைச் சேகரித்தால், சச்சின் கையெழுத்திட்ட பந்தடிக்கும் மட்டை (Cricket bat) கிடைக்குமெனக் கேள்விப்படுகிறான். சாமம், தானம், பேதம் என்ற முதல் மூன்று வழிமுறைகளைப் பின்பற்றி, கார்டுகளைச் சேகரிக்க முயல்கிறான் சிறுவன் சாம். அவனது ஆசை பலித்து, அவனால் புது கிரிக்கெட் மட்டை வாங்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
பதினெட்டு நாளில் எடுத்து முடிக்கப்பட்ட இப்படத்திற்கு, லைவ் சவுண்ட் ரெக்கார்டிங் செய்துள்ளனர். வடக்கு கன்னியாகுமரியின் வட்டார வழக்கை 'டப் (Dub)' செய்வது கட...