சென்சாரில் ”60 – கட் கொடுத்தார்கள்” – ‘ரா ரா சரசுக்கு ராரா’ பட இயக்குநர் பேச்சு
ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ஏ. ஜெயலட்சுமி தயாரித்து, கேசவ் தெபுர் இயக்கியிருக்கும் திரைப்படம் “ரா ரா சரசுக்கு ரா ரா”. ஆர்.ரமேஷ் ஒளிப்பதிவு பணிகளை கையாள, ஜி.கே.வி இசையமைத்துள்ளார். 9 V ஸ்டுடியோஸ் நிறுவனம் வரும் நவம்பர் 3-ம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது.
இப்படத்தின் அறிமுக விழா இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமி பேசும்போது, “தயாரிப்பாளர்களுக்காகத் தைரியமாகக் குரல் கொடுக்கும் கே.ராஜன் அவர்கள் இங்கே வந்திருக்கிறார். அவரது துணிச்சலுக்காக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க்கையில் எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? இரண்டு மணி நேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும், தன்னை மறந்து ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் படத்தை நாங்கள் எடுத்துள்ளோம்.இப்பொழுது கத்தி, வெட்டு குத்து, ர...