Shadow

Tag: Spider-Man review in Tamil

ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Universe – பிரபஞ்சம்; Multi-Verse – பன்னண்டம்; Spider-Verse – ஸ்பைடர் அண்டம்) பன்னண்டத்தின் வெவ்வேறு பிரபஞ்சங்களில் இருந்து வரும் ஸ்பைடர் - மேன்களும், ஸ்பைடர் - வுமன்களும், தத்துக்குட்டி ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸுடன் இணைந்து, வில்லன் கிங்பின்னின் கொலைடரை அழிப்பது, இத்தொடரின் முதற்பாகமான ‘ஸ்பைடர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்தின் கதையாகும். இந்தப் பாகத்தில், தன்னைக் காண வரும் க்வென் ஸ்டேசியுடன் இணைந்து பன்னண்டத்தின் பல பிராபஞ்சங்களுக்குள் ஊடுருவுகிறார் மைல்ஸ் மொரால்ஸ். பன்னண்டத்திலுள்ள பல ஸ்பைடர்-மேன்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஸ்பைடர் சொசைட்டிக்கும் செல்கிறார் மைல்ஸ் மொரால்ஸ். போன பாகத்தில், அழகான சின்னஞ்சிறு பன்றி ஸ்பைடர்-மேன் பூமிக்கு வரும். ஆனால், ஸ்பைடர் சொசைட்டியிலோ, ஆச்சரியமூட்டும் எண்ணிலடங்கா ஸ்பைடர்-மேன்கள் உள்ளனர். டைனோசர் ஸ்பைடர்-மேன். பூனை ஸ்பைடர்-மேன், குதி...