Shadow

Tag: Split movie review

ஸ்பிலிட் விமர்சனம்

ஸ்பிலிட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஸ்பிலிட் என்றால் ஆளுமைப் பிளவு எனப் பொருள் கொள்ளலாம். கெவின் என்பவருக்குள் மொத்தம் 23 ஆளுமைகள் வாழ்கின்றனர். அவர்களில் ஒருவரான டென்னிஸ், மூன்று இளம்பெண்களைக் கடத்தி விடுகிறார். அவர்கள் ஏன் கடத்தப்பட்டார்கள் என்பதுதான் படத்தின் கதை. முகத்தில் அறையும் ரத்தம் தெறிக்கும் வன்முறைகள் இல்லையெனினும், படம் பார்வையாளர்களை ஒரு சங்கடமான மனநிலையிலேயே வைக்கிறது. மைக் ஜியாலாகிஸின் (Mike Gioulakis) ஒளிப்பதிவு மனதோடு விளையாடுகிறது. பெண்கள் அடைக்கப்பட்ட மூடிய அறை, கம்மியான வெளிச்சம், பிரதான கதாபாத்திரமான ஜேம்ஸ் மேக்-அவாயின் (James McAvoy) உடை நிறம், வெஸ்ட்டைலன் தார்ட்சன்னின் பின்னணி இசையென, படம் கலவையாக ஒரு பதற்றமான ஆர்வத்தை உண்டு செய்கிறது. சுவாரசியமான கதையாக இல்லாவிட்டாலும், ப்ளாஷ்-பேக் யுக்திகளால் திரைக்கதையைச் சுவாரசியப்படுத்தியுள்ளார் மனோஜ் நைட் ஷ்யாமளன். கேஸியின் சிறு பிராயத்து அத்தியாயங்களும் மன...