Shadow

Tag: SPS Movies

கவுண்டம்பாளையம் விமர்சனம்

கவுண்டம்பாளையம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஓரு சிங்கத்தைக் கொளுத்தி விடுகின்றனர். அது எரிச்சல் தாங்காமல் ஆக்ரோஷமாக ஓடி வந்து கவுண்டம்பாளையம் என்ற தலைப்பில், வலி வேதனை கதறலுடன் பாய்கிறது. இப்படித் தலைப்பிலேயே வன்முறை தொடங்கிவிட, மனதைத் திடப்படுத்திக் கொண்டு அமர்ந்தால், பசுபதி மே/பா. ராசாக்காபாளையம் படத்தில் இருந்து இன்ஸ்பையராகி முதற்பாதியை ஒப்பேற்றியுள்ளார். ரஞ்சித் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் 'குழந்தை' ஆகும். வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத வடிகட்டின அப்பாவி. அவர் உடன் வேலை செய்யும் சேச்சி சினுங்கலான குரலில், 'வா பிசையலாம்' எனச் சொன்னால், அறிவு முதிர்ச்சியில்லாதவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். அறிவு முதிர்ச்சியுள்ளவர்கள் குணமாகப் பொறுமை காத்தால்தான், அடுத்த காட்சியில் அது பரோட்டா மாவு பிசைவதைப் பற்றிய வசனம் எனத் தெரிய வரும். 'ங்ண்ணா, பச்சு மண்ணு என்னைப் போய் சந்தேகப்பட்டுப் போட்டீங்களே!' என அவரது வெள்ளந்தித்த...