Shadow

Tag: Star Guru Film Productions

ரஞ்சனா நாச்சியார் – ஒரே நேரத்தில் 2 படங்களைத் தயாரிக்கும் நடிகை

ரஞ்சனா நாச்சியார் – ஒரே நேரத்தில் 2 படங்களைத் தயாரிக்கும் நடிகை

சினிமா, திரைத் துளி
'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'அண்ணாத்த', 'டைரி', 'நட்பே துணை' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா பாஸ்கர சேதுபதியின் பேத்தியான இவர் இயக்குனநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் ஆவார். பொறியியலில் எம்.எஸ்.சி, எம்.டெக். மற்றும் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) என மிகப் பெரிய படிப்புகளைப் படித்துவிட்டு, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் தமிழ்த் திரையுலகில் நுழைந்தவர் தான் ரஞ்சனா நாச்சியார். 'துப்பறிவாளன்' படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு நல்ல கதையம்சம் கொண்ட கதாபாத்திரம் உள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ரஜினிகாந்துடன் நடித்த 'அண்ணாத்த' மற்றும் அருள்நிதி நடித்த 'டைரி' ஆகிய படங்கள் இவரை இன்னும் அதிக அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தன. இந்த நிலையில் நடிப்பைத் தொடர்ந்து அடுத்ததாகத் தயாரிப்புத் துறையிலும் அடியெட...