இன்ஸ்பெக்டர் ரிஷி – இயற்கை அமைதி மர்மம்
மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் நந்தினி ஜே.எஸ் உருவாக்கி, சுக்தேவ் லஹிரி தயாரித்த தமிழ் சித்திரத்தில் நவீன் சந்திரா நாயகனாகவும், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.பத்து எபிசோட்கள் கொண்ட இத்தொடர் மார்ச் 29 அன்று பிரத்தியேகமாக பிரைம் வீடியோவில் இந்தியாவிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரீமியர் செய்யப்பட உள்ளது.இத் தொடர், பசுமை மற்றும் வனவிலங்குகள் நிறைந்த தமிழ்நாட்டின் ஒரு அழகிய கிராமத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. ஆனால் சூழல், இன்ஸ்பெக்டர் ரிஷி மற்றும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், (அய்யனார் மற்றும் சித்ரா,) காட்டின் ரகசியங்களை வெளிக்கொணரும் மற்றும் இந்த விவரிக்க முடியாத நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறியும் சவாலை ஏற்கின்றனர். மூவரும் தங்களுட...