
தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம்
தமிழ்ச்செல்வனுக்கு காவ்யா மீது கண்டதும் காதல் எழுகிறது. அவளை தினம் பார்ப்பதற்காக கொரியர் கம்பெனியில் வேலை செய்கிறான். சமூகச் செயற்பாட்டாளர் சத்யமூர்த்திக்குக் கொரியர் கொடுக்கப் போகும் பொழுது ஒரு பிரச்சனை எழுகிறது. அதென்ன கொரியர்? யாரால் பிரச்சனை? அதில் சிக்கிக் கொள்ளும் தமிழ்ச்செல்வன் எப்படி மீள்கிறான் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.
தமிழ்ப் படங்களில் சமூகச் செயற்பாட்டாளராக அதிகம் முறை நடித்தது யாரென ஏதேனும் ஆய்வு மேற்கொண்டால், கண்டிப்பாக நாசர் என்றே முடிவு வருமெனத் தோன்றுகிறது. மிகச் சமீபத்தில் வெளியான அர்த்தநாரி, கபாலி முதல் ஏகப்பட்ட படங்களைச் சான்றாக அடுக்கிக் கொண்டே போகலாம். சுந்தர்.சி நடித்த ‘ஆயுதம் செய்வோம்’ மற்றொரு நல்ல உதாரணம். நாசரை இந்தப் புனித பிம்பத்தில் இருந்து மீட்டு, ‘அவ்வை சண்முகி’ படத்தில் வரும் பாஷா பாய் போல் குணசித்திர வேடங்களிலும் மீண்டும் அவரைத் தமிழ்த் திரையுலகம் நடிக்...