“தி வில்லேஜ் | மக்கள் விரும்பும் திகில் தொடராக இருக்கும்” – ஆர்யா
ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் தமிழ் திகில் தொடரான 'தி வில்லேஜ்' எனும் நீண்ட வடிவிலான இணையத் தொடரின் உலகளாவிய பிரீமியரை அண்மையில் அறிவித்தது. இந்தத் தொடர், அதே பெயரில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோர் உருவாக்கிய கிராஃபிக் ஹாரர் நாவல்களால் ஈர்க்கப்பட்டு உருவாகியிருக்கிறது. தனது குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்குப் பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்க்க முயற்சி செய்யும் மனிதனின் கதையை இந்த திகில் தொடர் விவரிக்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இப்போது இந்த திகில் தொடரில் நடித்ததன் மூலம் இணையத் தொடரின் ஸ்ட்ரீமிங்கில் அறிமுகமாகிறார். இந்த திகில் தொடரில் அவர் கௌதம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரம், கட்டியல் எனும் கிராமத்தில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் சிலருடன் இணைந்து தனது குடும்பத்தைக் கண்டறியும்...