
தெறி விமர்சனம்
‘சிதறி விசையுடன் விழுதல்’ என தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.
விஜய்குமார் நேர்மையான நல்ல காவல்துறை அதிகாரி. அவர் நீதியை நிலை நாட்ட கொடூரமாக ஒரு கொலை செய்து விடுகிறார். நல்லவனே கொலை செய்யும் போது, கெட்டவன் சும்மா இருப்பானா? ஒரு கொலைக்குப் பதிலாக நான்கு கொலைகள் என இலக்கு நிர்ணயித்து பழி வாங்குகிறார் வானமாமலை. நாயகன் கதியென்ன? வானமாமலை வதம் நடந்து தர்மம் வென்றதா? எதார்த்தத்தில் நிகழ்வது போல் அதர்மம் வென்றதா? முதலிய கேள்விகள் தான் படத்தின் கதை.
படத்தின் ஆச்சரியமும் அழகுமாக நிவி எனும் பாத்திரத்தில் நடித்துள்ள நைனிகாதான். நைனிகா என்றால் அழகிய கண்களுடையவர் எனப் பொருளாம். சில ஃப்ரேம்களில் மீனாவை ஞாபகப்படுத்துகிறது அவரது முகம். நைனிகா ஆளும் ஃப்ளாஷ்-பேக்கிற்கு முன்னான ஆரம்ப காட்சிகள் சாரலில் நனைந்தது போல் இருக்கிறது. பின் தொடங்கும் வழக்கமான கதை சொல்லலில் இருந்து அயர்ச்சி ஏற்படுகிறது. இடைவேளைக்குப் பி...