Shadow

Tag: Thiri விமர்சனம்

திரி விமர்சனம்

திரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'இளைஞர்களைத் தூண்டி விடுதல் என்ற பொருளில் திரி எனப் படத்திற்குத் தலைப்பு வச்சிருக்கேன்' என இயக்குநரே தனது தலைப்பிற்கான பொருளை இசை வெளியீட்டு மேடையில் விளக்கியுள்ளார். படித்த மாணவனுக்கும், அரசியல் செல்வாக்குள்ள கல்வியறிவு இல்லாக் கல்லூரித் தாளாளருக்கும் நடக்கும் பிரச்சனையே 'திரி' படத்தின் கதை. கதைக்குள் செல்வதற்கு முன், பாரம்பரியமான முறையில் மிக அதிக நேரத்தைக் கதாபாத்திர அறிமுகத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளார் இயக்குநர் அசோக் அமிர்தராஜ். ஹீரோவின் தந்தை, ஒழுக்கத்தின் மீது செலுத்தும் அதீத கவனத்தைத் தேவைக்கும் அதிகமான காட்சிகள் மூலம் பதிந்துள்ளனர். அதாவது, கதையோடு பொருத்திச் சொல்லாமல், தனிக் காட்சிகளாகச் சொருகியுள்ளார் இயக்குநர். அஷ்வினுக்கும் ஸ்வாதிக்கும் இடையேயான காதல் காட்சிகள் சொதப்பல் ரகம். சுவாரசியப்படுத்த வேண்டிய காட்சிகளை எல்லாம் தவறவிட்டது படத்தின் மிகப் பெரிய பலவீனம். படத்தின் முதல்...