திருநாள் விமர்சனம்
யாருமற்ற அடியாளான பிளேடிற்கு சாக்கு மண்டி முதலாளி மகள் வித்யா மீது காதல் மலர்கிறது. அக்காதல் வெளியில் தெரிய வர, அனைவருக்கும் குழப்பமும் சங்கடமும் மேலிடுகிறது. அவர்கள் காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை.
தாதாவாக சரத் லோகிதஸ்வா மிரட்டியுள்ளார். ஆஜானுபாகுவான தோற்றமும், கூரிய பார்வையும் கொண்ட அவர் தோன்றும் முதல் ஃப்ரேமில் இருந்தே மனிதன் அசத்துகிறார். அவருடன் ஃப்ரேமில் யார் தோன்றினாலும் பொலிவிழந்து போகின்றனர். இவர் சரீரத்தால் மிரட்டினால், கரடு முரடான சாரீரத்தாலும் பெரிய விழிகளாலும் அச்சுறுத்துகிறார் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். இவர் முன் மீசையை முறுக்கிக் கொண்டு வண்டியில் உட்காரும் 'நீயா? நானா?' கோபிநாத், ஃப்ரேமில் நானில்லை என்பது போல் பொலிவிழுந்து காணப்படுகிறார். திறமையான காவல்துறை அதிகாரி எனக் காட்ட திரைத்துறைக்குத் தெரிந்த ஒரே வழி "என்கவுன்ட்டர்" மட்டும் தான் போலும். கோபிநாதிற்குப் பொருந்தா...