
திட்டிவாசல் விமர்சனம்
திட்டிவாசல் என்றால் பெரிய கதவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய திறப்பு அல்லது வாயில் ஆகும். கோயில், கோட்டை முதலியவை அடைத்திருக்கும் போது ஆட்கள் உள்ளே சென்று வருவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே திட்டிவாசல். படத்தின் தலைப்போ, மத்திய சிறைச்சாலையின் உட்கதவான திட்டிவாசலைக் குறிக்கிறது. படத்தின் டைட்டில் அனிமேஷனே, சிறைச்சாலை திட்டிவாசலில் இருந்து பான்-அவுட் (Pan-Out) ஆகி மத்தியச் சிறைச்சாலையின் முகப்பிற்கு வந்து நிற்பதுதான்.
சிலரின் பகாசூரப் பேராசைக்கு, முள்ளம்பாறை எனும் மலைக்கிராம மக்கள் எப்படி பலியாகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
மகேந்திரன், வினோத் கின்னி என இரண்டு நாயகர்கள் படத்தில். அவர்களுக்கு தனு ஷெட்டியும், ஐஸ்வர்யாவும் முறையே ஜோடிகள். இயற்கையைக் கூறு போடும் சுரண்டலைப் பற்றிப் படம் பேசுவதால், பிரதான பாத்திரங்களான இவர்களுக்குக் காதலிப்பதைத் தவிர வேறு வேலையில்லை. என்றாலும், செம்பருத்தியா...