தொரட்டி விமர்சனம்
இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலைப் பேசும் ஓர் அற்புதமான படம்.
‘துறட்டி’ என்றால் மேல் முனையில் கொக்கி போன்ற சாதனம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பு. துறட்டி என்பதன் பேச்சுவழக்கு மழூஉ தான் தொரட்டி. தொரட்டி என்பது ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு கீதாரிகளின் கையுள்ள கருவியாகும்.
கீதாரிகளின் வாழ்வியலைத் தொட்டு விட்டு, பின் படம் கூடா நட்பு கேடாய் விளையும் என்பதை நோக்கிப் பயணிக்கிறது.
மாயன் எனும் பாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார் ஷமன் மித்ரு. பெற்றோர் பேச்சோ, மனைவி பேச்சோ கேட்காமல், குடிக்காரக் கள்ளர்களோடுநட்பைப் பேணுகிறார் நாயகன். அதற்காக நாயகன் கொடுக்கும் விலை மிகப் பெரியது. அலட்டலில்லாத நடிப்பில் கதையின் போக்கிற்கு நியாயம் செய்துள்ளார். எளிமையான கதைக்களத்தைத் தன் ஒளிப்பதிவால் மிகச் சிறந்த பதிவாக மனதில் ஊடுருவ விட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் குமார...