Shadow

Tag: To Let movie

டுலெட் விமர்சனம்

டுலெட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தாங்கள் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் உரசல், புது வீடு தேடி அலுக்கும் படலம், சொந்த வீட்டுக்கான விழைவு ஆகிய மூன்றையும் கடக்காதவர்கள், நூற்றுக்கு ஒரு சதவிகிதம் பேரே இருப்பார்கள். மீதி, தொண்ணூத்தொன்பது பேர்க்கு இந்த அனுபவம் வாய்த்திருக்கும். சொந்த ஊரில் பத்து வீட்டை வாடகைக்கு விட்டுச் சொகுசாய்க் காலாட்டிச் சம்பாதிக்கும் பாக்கியசாலிகள் கூட, என்றேனும் எப்போதாவது இன்னொரு ஊரில் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். ஆக, டுலெட் 99 சதவிகிதத்தினருக்கு நிகழ்ந்த, நிகழும் 100 சதவிகிதம் உண்மையான கதை. 100 திரைப்பட விழாக்களில், 84 பரிந்துரைகளில் இந்திய அரசின் தேசிய விருது உட்பட 32 விருதுகளைப் பெற்றுள்ளது. அதிக விருதுகளை வாங்கிய தமிழ் சினிமா என்ற பெருமையைப் பெற்றுள்ளது டுலெட் திரைப்படம். கோலிவுட்டை நம்பியிருக்கும் எண்ணற்றவர்களில் ஒருவனான இளங்கோவின் காதல் மனைவி அமுதாவிடம், ஒரு மாதத்திற்கு...