
The Indian In Me விமர்சனம்
இது, 28 நிமிடங்கள் கால அளவு கொண்ட ஓர் ஆங்கிலோ-இந்தியக் குறும்படமாகும்.
மரணப்படுக்கையில் இருக்கும் ரிச்சர்ட் எனும் ஆங்கிலோ-இந்தியர், தனது பேரனின் இந்திய மனைவியான சாந்தியிடம் மன்னிப்பு கேட்கிறார். சாந்தி பதறிப் போய், 'ஏன் பப்பா? நீங்க என்னிடம் எப்பவும் அன்பாகத்தானே நடந்துக்கிட்டீங்க?' எனக் கேட்கிறார்.
தன்னை எப்பொழுதும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதும் ரிச்சர்ட், "அது என் குற்றவுணர்ச்சியால் அப்படி நடந்து கொண்டேன்" என்கிறார் எண்பது வயது ரிச்சர்ட்.இந்தக் கதையில், ரிச்சர்ட், ஆஸ்திரேலியாவில் வாழும் அவரது மூத்த மகன் ஃப்ரெடி, இளைய மகன் பீட்டர், பீட்டரின் மனைவி சார்மைன் வால்டர்ஸ், பீட்டரின் மகனும் - ரிச்சர்டின் பேரன் மார்க், மார்க்கின் மனைவி சாந்தி என பிரதான பாத்திரங்கள் அறுவர்தான். அனைவருமே உருவகங்களாகப் (Metaphor) பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலியா...


