V1 விமர்சனம்
விசாரணையில் துவங்கும் படம், சமூகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு விசயத்தை மீள் விசாரணை செய்வதாக முடிகிறது.
லிவிங் டுகெதரில் இருக்கும் ஒரு ஜோடியில், பெண் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவளின் காதலன், ‘கொலையை நான் தான் செய்தேன்’ என ஒப்புக் கொள்கிறான். ஆனால் கொலையை அவன் செய்யவில்லை. அந்தக் கொலையை யார் செய்தார் என்ற கேள்வியோடு படம் விரிகிறது.
யார் கொலைகாரர் என்ற கேள்வியில் பயணிக்கும் படத்தில் திருப்புமுனைகள் தான் பிரதானம். V1 படத்தில் அது திரும்பும் இடத்தில் எல்லாம் இருக்கிறது. அவையெல்லாம் நம்மை ஈர்ப்பதற்கான திருப்புமுனைகளையே ஒழிய லாஜிக் ரிதீயான திருப்புமுனையாக இல்லை. இதுதான் இப்படத்தின் சறுக்கல்.
நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோ சிரமம் இல்லாமல் நடிக்க வேண்டிய இடங்களில் எல்லாம் சிரமப்பட்டிருக்கிறார். நாயகி விஷ்ணுபிரியா ஓரளவு அவரின் காதாபாத்திரத்திற்குரிய நியாயத்தை நடிப்பில் சேர்த்துள்ளார். லிஜீஸ் ...