வாரிசு விமர்சனம்
தொழிலதிபர் ராஜேந்திரன் பழனிச்சாமிக்கு, ஜெய், அஜய், விஜய் என மூன்று மகன்கள். தனது தொழில் வாரிசாக அவர் எந்த மகனை நியமிக்கப் போகிறார் என முடிவெடுக்கக் கதையில் எழு வருடமும், படத்தில் ஒரு மணி நேரம் பத்து நிமிடங்களும் எடுத்துக் கொள்கிறார் ராஜேந்திரன். ராஜேந்திரனின் மகுடம் அவரது இளைய மகன் விஜய் ராஜேந்திரனிடம் போகிறது. பிளவுப்படும் குடும்பத்தையும், ராஜேந்திரன் எழுப்பிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், விஜய் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
ஒரு நாயகன் மாஸாகவோ, பாஸாகவோ பரிணாமம் அடைய, வலுவானதொரு வில்லன் தேவை. படத்தில், சொல்லிக் கொள்ளும்படியான வில்லத்தனத்தை ஜெய், அஜயாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்தும் ஷாமுமே செய்து விட, தொழிலதிபர் ஜெயபிரகாஷாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜின் பாத்திரம் டம்மி வில்லனாகக் காற்று போன பலூனாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்கு முன் விஜயே கடுப்பாகி...