Shadow

Tag: Vasanth Ravi

‘ராக்கி’ வசந்த் ரவி

‘ராக்கி’ வசந்த் ரவி

சினிமா, திரைத் துளி
"எனது சொந்த ஊர் திருநெல்வேலி. வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில். ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தேன். சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வமிருந்தாலும் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும்போதே நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. ஆனால், எனது பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. 'எது செய்வதாக இருந்தாலும் மருத்துவம் படித்துவிட்டு செய்' என்றார்கள். அவர்கள் கூறியதுபோல நானும் படித்து முடித்தேன். நடிப்பின் மீதிருந்த ஆர்வம் குறையாததால் மும்பைக்குச் சென்று அனுபம்கேர் நடிப்புப் பள்ளியில் பயிற்சி மேற்கொண்டேன். பின்பு ராஜீவ் மேனனிடமும் பணியாற்றினேன். ஆனால், பெற்றோர்கள் மருத்துவம் மட்டும் போதாது மருத்துவ மேற்படிப்பும் படிக்க வேண்டும் என்றதும், மருத்துவமே படித்தால் அந்தத் துறையிலிருந்து வரமுடியாது என்ற காரணத்தால் மருத்துவம் சார்ந்து ஹெல்த் கேர் மேனேஜ்மேண்ட் படித்தேன். பிறகு சென்னையில் ஒரு பிரபல ம...
தரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்

தரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்

சினிமா, திரைத் துளி
தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் பெற்ற நடிகர் வசந்த் ரவி தனது அடுத்த படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார். RA Studios சார்பாக C.R.மனோஜ் குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில் இயக்குநர் தியாகராஜா குமார ராஜாவிடம் பணியாற்றிய அருண் மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இறுதிச்சுற்று படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான திரைக்கதை அமைத்து ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளுக்கும் ஒவ்வொரு வகையான சண்டை அமைப்பை உருவாக்கி, ஆக்ரோஷமான காட்சிகளாக வெளிவர தினேஷ் சுப்பராயன் புதிய யுக்தியை வடிவமைத்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் மிஷ்க...