Shadow

Tag: VCare

கருகரு முடி – ஆர்கேவின் பெருமிதம்

கருகரு முடி – ஆர்கேவின் பெருமிதம்

வர்த்தகம்
தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே. ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்குத் தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாகப் பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்தப் புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்கே, “இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதைக் கருப்பாக்கக் கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான். நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பதற்கு அதிகப்படியான நேரம்...