
வீரம் விமர்சனம்
தீபாவளிக்கு ஒரு படம், பொங்கலுக்கு ஒரு படமென அடித்து ஆடுகிறார் அஜித். அவரது வெள்ளை-கருப்பு முடி திரையில் தெரிந்ததுமே, திரையரங்கம் அதிர ஆரம்பித்து விடுகிறது.
அடிதடிதான் வாழ்க்கை என்றிருக்கும் விநாயகம், அகிம்சாவாதியான நல்லசிவத்தின் மகள் கோப்பெரும்தேவி மீது காதல் வயப்படுகிறார். அடிதடி வாழ்க்கையா அல்லது கோப்பெரும்தேவியா என விநாயகம் முடிவெடுப்பதுதான் படத்தின் கதை.
விநாயகமாக அஜித். வெள்ளை தாடி , வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை என திரையில் ஜொலிஜொலிக்கிறார். சும்மா வந்து நின்றாலே விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. எத்தனைபேர் வந்தாலும் அடித்து துவம்சம் பண்ணுகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு, அஜித்தின் குரலையும் தொழில்நுட்ப உதவியால் கம்பீரமாக்கியுள்ளனர்.
படத்தில் அஜித்திற்கு நான்கு தம்பிகள். தமிழ் சினிமாவின் வழக்கம்போல், அஜித் ஒரு பாசக்கார அண்ணன். பாலா தான் அஜித்தின் பெரிய தம்பி. மலையாளப் பக்க...