
வீட்டுக்கு வருகிறது கலகலப்பான விசேஷம்
ஜீ5 தளம், இந்த ஆண்டின் மிகவும் கொண்டாடப்பட்ட தமிழ்க் குடும்பப் பொழுதுபோக்கு படமான ‘வீட்ல விசேஷம்’ படத்தை, ஜூலை 15, 2022 முதல் வெளியிடுகிறது.
'பதாய் ஹோ' எனும் ப்ளாக்பஸ்டர் ஹிந்தித் திரைப்படத்தின் அதிகாரபூர்வமான தழுவலான இப்படத்தில், ஆர்ஜே பாலாஜி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் NJ சரவணனுடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு நடுத்தர வயது தம்பதி கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் போது, அது அவர்களின் வளர்ந்த மகன்களை சங்கடப்படுத்துகிறது. இந்தக் குழப்பங்களைக் கடந்து அந்தக் குடும்பத்தில் எப்படி சிரிப்பு மலர்கிறது எனும் கதை, உறவுகளின் அழகை வலியுறுத்துவதன் மூலம் நகைச்சுவை மற்றும் இதயத்தைத் தொடும் உணர்ச்சிகளின் மிகுதியாக இப்படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் குடும்பத்தினர் மற்றும் ந...


