Shadow

Tag: Vendhu Thaninandhu Kaadu review

வெந்து தணிந்தது காடு விமர்சனம்

வெந்து தணிந்தது காடு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தன்னைச் சுற்றி ஓர் அதிகார மையத்தை உருவாக்கிய எந்த ஒரு டானின் கதையை எடுத்துக் கொண்டாலும், அதன் பின்னால் ஒளிந்திருப்பது ஒரேயொரு விஷயம் தான். சர்வைவல் ஆப் தி பிட்டெஸ்ட். அதாவது, தக்கண தப்பிப் பிழைக்கும். அதிலேயும் நாம் கேட்டறிந்த பெரும்பாலான டானின் கதைகள் அடிமட்டத்தில் இருந்து கிளர்ந்து மேலே வந்தவனின் கதைகளாகத்தான் இருக்கும். வாழ்க்கையால் விரட்டப்பட்டு, சுற்றத்தால் கைவிடப்பட்டு, இனி ஆவதற்கு ஏதும் இல்லை என்ற கணத்தில் கத்தியைத் தூக்கியவன் எடுத்த முதல் பலியில் இருந்தே ஆரம்பமாகி இருக்கும். அப்படித்தான் ஆரம்பமாகிறது இந்தக் கதையும். எவன் ஒருவனும் விரும்பி கத்தியைத் தொடுவதில்லை. அதைத் தொடுவதற்கான சந்தர்ப்பங்களை அவனைச் சுற்றி நிகழும் தருணங்களே ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அவனும் தொடுகிறான். அதற்காக அப்படித் தொட்டவன் அத்தனை பேரும் டான் ஆகிவிடுவதில்லை. டான் ஆனவன் எவனும் ரத்ததைப் பார்க்காமல் அந்த இடத்...