
வெனம் விமர்சனம்
உலகம் வாழத் தகுதியற்ற கிரகம் என நம்புகிறார் லைஃப் ஃபெளண்டேஷனின் கார்ல்டன் ட்ரேக். சமீபமாய் ஹாலிவுட் வில்லன்கள் அனைவரையுமே இந்த பயம் ஆட்டுவிக்கிறது. அவர்களை இரு சாரராகப் பிரிக்கலாம். முதல் வகையினர், மக்கள் தொகையைப் பாதியாகக் குறைத்துவிட்டால், பூமி பழையபடி பூத்துக் குலங்கத் தொடங்கிவிடும் என நம்புவர்கள். இன்னொரு சாரார், மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு பூமியை விட்டே போய்விடுவது என நம்புவர்கள். கார்ல்டன் ட்ரேக், இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த வில்லன்.
சரி, பூமியை விட்டு வெளியில் போய்விட்டால் போதுமா? மனிதர்கள் விண்வெளியில் வாழ அவர்களின் உடலினை, அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு தகவமைக்க வேண்டுமா? அதனால் விண்கல்லில் ஒட்டிக் கொண்டிருக்கும் நான்கு கூட்டுயிரிகளை (Symbiote) ஆய்வு செய்கிறார். மனிதரோடு கூட்டுச் சேராமல், அவ்வுயிரிகள் கார்ல்டன் ட்ரேக்கிற்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருக்க, ஒரு விபத்து போல் எடி ப...


