விடியும் முன் விமர்சனம்
பிரதான கதாபாத்திரங்களை நாயகன், வில்லன் என்ற இரண்டுக்குள் தமிழ்த் திரைப்படம் அடக்கி விடும் (மிக அரிதினும் அரிதாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதால் கணக்கில் எடுக்கவில்லை). இந்த இரண்டையும் கூட இன்னும் சுருக்கி நல்லவனுக்கம் கெட்டவனுக்குமான போராட்டம் என்ற ஒற்றை பரிமானத்தை அடையலாம். ஆனால் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு மெல்லிய முக்கியத்துவத்தையாவது கொடுத்து விடுமளவு திரைக்கதை கொண்ட படம் மிக அபூர்வம். அப்படியொரு அபூர்வம் தான் ‘விடியும் முன்’ திரைப்படம்.
விலைமகளான ரேகாவையும், சிறுமி நந்தினியையும் ஒன்றுக்கும் மேற்பட்ட கும்பல் தேடி அலைகிறது. ஏன் எதற்காக என்பது தான் படத்தின் கதை.
உங்களுக்கு வினோத் கிஷனைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரது குத்திட்ட பார்வை நமக்கு நன்றாக அறிமுகமானதே! ‘நந்தா’ படத்தில் தன் தந்தையை அடித்துக் கொன்றுவிடும் அந்த சிறுவன் தான்...