Shadow

Tag: Vinnaithaandi Varuvaayaa

VTV – விண்ணைத்தாண்டி வருவாயா | 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்

VTV – விண்ணைத்தாண்டி வருவாயா | 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்

சினிமா, திரைத் துளி
சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளைthஹ் தந்து, உணர்வுகளோடு பிணைந்து என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் பல இனிமையான தருணங்களை உருவாக்கி, என்றென்றைக்குமான காதல் கதையாக நிலைத்து நிற்கிறது. 15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்தப் படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்தப் படத்தை சிறப்பானதாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தனர். இந்த சிறப்புக் கொண்டாட்ட நிகழ்வில், நடிகர் சிலம்பரசன் டி.ஆர்., வி.டி.வி கணேஷ் ஆகியோர் ஒரு காணொளியில் தோன்றி, இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவி...