விஸ்வரூபம் விமர்சனம்
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் ஒருவர் நியூயார்க் நகரை தாலிபான் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவது தான் படத்தின் கதை.படத்தின் முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் கமல் என்னும் உன்னத கலைஞர் தனது நடிப்பின் உச்சத்தைத் தொட்டுள்ளார். அவரது நடனம், பார்வை, நடை, வசனம் பேசும் தொனி என சகலத்திலும் ரசிகர்களை ஈர்க்கிறார். அதன் பின் படத்தில் கோலேச்சுவது இயக்குநர் கமல். தமிழ் சினிமா கண்டிராத ஒரு தொழில்நுட்ப விருந்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளார். படத்தின் மாபெரும் பலம் வசனங்கள். வசனங்களுக்கு Epigram என்றொரு தனி குழு அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதிகளின் துப்பாக்கி முனையில் நாயகன் இரத்தம் வருமளவு உதை வாங்கும் பொழுதும்.. வசனங்கள் அதன் தீவிரத்தன்மையைக் குறைத்து ரசிக்க வைக்கிறது. அதே போல் நாயகிக்கும், எஃப்.பி.ஐ. அதிகாரிக்கும் நடக்கும் கடவுள் பற்றிய உரையாடல் குறிப்பிடத்தக்கது. இன்றளவும் ப...