விழித்திரு விமர்சனம்
'ஓர் இரவில் நான்கு கதைகள்' என்பதுதான் படத்தின் உபத்தலைப்பே!
திருநெல்வேலிக்கு ஊர் திரும்ப வேண்டிய ஒருவனின் பர்ஸ் சென்னையில் பிக்பாக்கெட் அடிக்கப்படுகிறது. அன்றிரவு அவனுக்கு என்னென்னவெல்லாம் நிகழ்கிறது என்பதுதான் படத்தின் கதை.
விதார்த், வெங்கட் பிரபு, ராகுல் பாஸ்கரன் எனப் படத்தில் மூன்று பிரதான கதாபாத்திரங்கள் இருந்தாலும், கிருஷ்ணா தான் படத்தின் நாயகன். பர்ஸைக் கிருஷ்ணா தொலைப்பதில் இருந்தே கதை தொடங்குகிறது. அவரது படபடவென்ற மேனரிசத்துக்கு ஏற்ற பாத்திரம்.
திருடன் சந்திர பாபுவாக விதார்த். திருடி சரோஜா தேவியாக சாய் தன்ஷிகா. இருவரது அறிமுகமும், ஒருவரை ஒருவர் ஏய்க்கப் பார்க்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. வெடுக் வெடுக்கெனப் பேசும் கதாபாத்திரத்தில் சாய் தன்ஷிகா அசத்தியுள்ளார். ஆனால், இத்தகைய சீரியசான படத்துக்கு தம்பி ராமையாவின் அசட்டு நகைச்சுவையும், விஜய டி.ராஜேந்தரின். குத்துப் பாட்டும் அவச...