Shadow

Tag: Wagah thirai vimarsanam

வாகா விமர்சனம்

வாகா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகிஸ்தான் பெண்ணான காணமைக் காதலிக்கிறான் இந்திய இராணுவ வீரனான வாசு. அவர்கள் காதல் என்னானது என்பதே படத்தின் கதை. ஹரிதாஸ் படத்தின் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலனின் அடுத்த படமிது. ஹரிதாஸ் ஈட்டிய புகழை மறக்காமல், எதிலும் கவனம் செல்லாத நாயகனுக்கு ஆட்டிசம் இருந்தது என ஒரு முடிச்சுப் போட்டுள்ளார். இலவசமாக மது கிடைக்குமென இராணுவத்தில் சேர்ந்து விடுகிறான் நாயகன். இந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையையும் அலட்சியத்தையும் படம் நெடுகே வெளிப்படுத்தியுள்ளார் விக்ரம் பிரபு. நாயகியைப் பார்த்ததும் லட்சியக் காதலனாகி விடுகிறார். நாயகியாக ரன்யா ராவ். கதாபாத்திரத்தின் பெயர் காணம் என்றாலும், நாயகன் காஜல் எனப் பெயரை மாற்றிக் கொள்கிறான். ஏன் காஜல் என்ற பெயரை நாயகிக்குச் சூட்டுகிறான்? காணம் என்ற பெயருக்கு என்னக் குறைச்சலென்றும் தெரியவில்லை. இத்தகைய குழப்பமும், தெளிவின்மையும் திரைக்கதை நெடுகேயும் உள்ளது. கண்டதும் காத...