
பிக் பாஸ் 3: நாள் 79 | ‘சேரப்பா யாரப்பா?’ – லாஸிடம் கவின்
பிக் பாஸில் காட்டப்படும் உணர்வுகள் போலியானது. அதெப்படி? ஒருத்தருக்கொருத்தர் தெரியாதவங்க, ஒரு வீட்டுக்குள் போன உடனே காதல் வருது, நட்பு வருது, பாசம் வருது. இது ஒரு கேம் ஷோ. எல்லாமே நடிப்பு தான், இதுக்கு போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா எனக் கேட்பவர் ஒருபக்கம். இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு இருக்கிறவங்களுக்குக் கூட இதே மாதிரியான கேள்விகள் கேட்டுக் கொண்டே தான் உள்ளனர்.
முதலில் இங்கே எழுதப்படுவது அனுமானங்கள் மட்டுமே! ஒவ்வொரு பாத்திரமும் ரியாக்ட் செய்யும் போது, அந்தப் பாத்திரத்தில், அந்தச் சூழ்நிலையில் என்னைப் பொருத்தி, நாம எப்படி நடந்துக்குவோம், என்ன யோசித்திருப்போம், எப்படி ரியாக்ட் செய்வோம் என யோசித்து எழுதுவது தான். அப்படி எழுதறது குறைந்தபட்ச லாஜிக்கோட இருக்கும் போது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. லாஜிக் இல்லையெனில் மாற்றுக்கருத்து வருகின்றது. இப்படி இருக்கலாம், இந்தக் காரணத்துக்காக அந்தக் கேரக்டர் ...