
X வீடியோஸ் விமர்சனம்
“இப்படம் முழுக்க முழுக்க X வீடியோஸ் என்கிற இணையதளத்திற்கு எதிரான படம். இந்த இணையதளம் மூலம் மக்களின் வாழ்க்கையில் எப்படி அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார் படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர்.
அந்தரங்கமான நேரத்தை மொபைலிலோ, கேமிராவிலோ விளையாட்டாய் எடுக்கப்படும் வீடியோக்கள் எப்படியெல்லாம் ஆபாச இணையதளங்கள் சேகரித்து ஒளிபரப்புகின்றனர் என்பதை உறித்துக் காட்டியுள்ளார் இயக்குநர். அப்பட்டமாகவே உறிப்பதால் A சான்றிதழ் பெற்றுள்ளது படம்.
அரை நிர்வாணக் காட்சிகளின் துல்லியம் சற்றே திடுக்கிட வைக்கின்றன. இயக்குநர் சஜோ சுந்தரின் தைரியம் ஆச்சரியமூட்டுகிறது. கதைக்கருவை மட்டுமின்றி, காட்சிப்படுத்திய விதத்திலும் பெரிதும் சமரசமின்றி எடுத்துள்ளார். ஆனால், அத்தகைய காட்சிகள் திரைக்கதையின் நோக்கில் இருந்து விலகாமல் கட்டுக்குளேயே அவிழ்வது ஆறுதல். முற்றிலும் புதிய முகங்கள...