32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

TEST – கிரிக்கெட்டும், வாழ்க்கையளிக்கும் சோதனைகளும்

Dinesh R சேலம் Published: 06/03/2025 2 நிமிட வாசிப்பு அயல் சினிமா
எழுத்து அளவு:

கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது என்பதுதான் ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் கதையாகும். ஏப்ரல் 4 அன்று, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘டெஸ்ட்’ திரைப்படம் ப்ரீமியர் ஆகிறது. இதில் நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

துணிச்சலான, அழுத்தமான கதைகளைத் தயாரித்த ‘YNOT’ ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. இது பற்றி இயக்குநர் சஷிகாந்த், “பல ஆண்டுகளாக ஒரு தயாரிப்பாளராக நல்ல படங்களைத் தயாரித்துவிட்டு தற்போது ‘டெஸ்ட்’ படத்திற்காக இயக்குநர் நாற்காலியில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியாகவும் தனிப்பட்ட முறையில் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்தத் திரைப்படம் பல உணர்வுகள், சூழ்நிலைகளின் முடிவு, வாழ்க்கை எப்படி அனைவருக்கும் சில சோதனைகளைத் தருகிறது என்பதைத்தான் ‘டெஸ்ட்’ பேச இருக்கிறது. ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகிய மூவரும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருப்பது ஸ்பெஷலான விஷயம். இந்தக் கதையை சாத்தியமாக்கிய ‘YNOT’ ஸ்டுடியோஸ், நெட்ஃபிலிக்ஸ் மற்றும் எனது அணிக்கும் நன்றி. ஏப்ரல் 4 முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘டெஸ்ட்’ படம் ப்ரீமியர் ஆகிறது” என்றார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நெட்ஃபிலிக்ஸ் கண்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட் மோனிகா ஷெர்கில், “2025 ஆம் ஆண்டில் எங்கள் முதல் தமிழ்த் திரைப்படம் ‘டெஸ்ட்’. நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கின்றனர். அழுத்தமான த்ரில்லர் கதையாக இது உருவாகி இருக்கிறது. கிரிக்கெட் பின்னணியில் அமைக்கப்பட்ட கதை இது. ஒரு தேசிய அளவிலான கிரிக்கெட் பிளேயர், ஒரு விஞ்ஞானி மற்றும் ஆர்வமுடைய ஆசிரியர் ஒருவர் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. அவர்களின் லட்சியம், தியாகம் மற்றும் தைரியத்தைச் சோதிக்கும் உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டராக கதை இருக்கும். இயக்குநர் எஸ். சஷிகாந்த் இந்தக் கதையை கடைசி நிமிடம் வரை பார்வையாளர்களைக் கட்டிப் போடும் வகையில் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு ‘டெஸ்ட்’ படத்தைக் கொண்டு சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளோம்” என்றார்.

விளையாட்டில் ஒரு முடிவும் தருணமும் மறக்க முடியாதது. ஒரு கணம், ஒரு தேர்வு, அதுதான் நாயகனாகவோ, வில்லனாகவோ மாற்றும். இந்தத் திரைப்படம் விளையாட்டைப் பற்றியது மட்டுமல்ல, வாழ்க்கை உங்களை நோக்கி வீசும் சோதனைகளையும் பற்றியது.

தொழில்நுட்பக் குழு:-

எழுத்து இயக்கம் – எஸ்.சஷிகாந்த்
தயாரிப்பு – YNOT ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர் – சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.