Shadow

தி பாரடைஸ் | The Paradise Glimpse: Raw Statement | நானி

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, ஸ்ரீகாந்த் ஒடெலா, சுதாகர் செருகுரி, SLV சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தி பாரடைஸ்’ எனும் திரைப்படத்திலிருந்து ரா (Raw) ஸ்டேட்மென்ட் எனும் பெயரில் பிரத்தியேகமான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது.

அசைவொளியில் வரும் பின்னணி குரல், ”வரலாற்றில் எல்லோரும் கிளிகள் மற்றும் புறாக்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். ஆனால் அதே இனத்தில் பிறந்த காகங்களைப் பற்றி யாரும் இதுவரை எழுதியதில்லை. பசியால் வயிறு எரிந்த காகங்களின் கதை இது. பல காலமாக நடந்து வரும் சடலங்களின் அழுகைகள், தாயின் மார்பிலிருந்து பாலில் அல்ல, ரத்தத்தில் எழுப்பப்பட்ட ஒரு சமூகத்தின் கதை. ஒரு தீப்பொறி பற்ற வைக்கப்பட்டு, முழுச் சமூகத்தையும் உற்சாகத்தால் நிரப்பியது. ஒரு காலகட்டத்தில் இழிவுபடுத்தப்பட்ட காகங்கள் இப்போது தங்கள் கைகளில் கூரிய வாள்களை வைத்திருக்கின்றன. அந்தக் காகங்களை ஒன்றிணைத்த ஒரு கலகக்கார இளைஞனின் கதை இது. அந்த இளைஞன் ஒரு தலைவராக மாறிய கதை” என விவரிக்கிறது.‌

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , மற்றும் ஸ்பானிஷ் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ரா ஸ்டேட்மென்ட் எனும் பிரத்யேக வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

தொழில்நுட்பக் குழு:-

எழுத்து இயக்கம் – ஸ்ரீகாந்த் ஓடெலா
தயாரிப்பாளர் – சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் – SLV சினிமாஸ்
ஒளிப்பதிவு – ஜி கே விஷ்ணு
இசை – அனிருத் ரவிச்சந்தர்
படத்தொகுப்பு – நவீன் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ