Shadow

வைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்

vaibhav-in-lock-up

“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாகவும், வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குநரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “லாக்கப்”. இயக்குநர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய SG சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பல படங்களில் நகைச்சுவை கலந்த படங்களில் இணைந்து வந்த வைபவ் – வெங்கட்பிரபு கூட்டணி முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியஸான கதாபாத்திரத்தில் “லாக்கப்” திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் வெளியான “லாக்கப்” படத்தின் டீசர் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. படத்தின் எதிர்ப்பார்ப்பைக் கூட்டும் வகையில் இப்படத்தின் டீசர் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டது.

மேலும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

>> படத்தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த்
>> கலை – ஆனந்த் மணி
>> மக்கள் தொடர்பு – AIM