32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

VD12 – சூர்யாவின் குரலில் ‘கிங்டம்’ டீசர்

Dinesh R சேலம் Published: 13/02/2025 2 நிமிட வாசிப்பு Teaser
எழுத்து அளவு:

கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் #VD12 படத்திற்கு ‘கிங்டம்’ என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

டீசரில், சூர்யா தமிழுக்கும், ஜூனியர் என்டிஆர் தெலுங்கிற்கும், ரன்பீர் கபூர் இந்திக்கும் குரல் கொடுத்துள்ளார்கள். இது ரசிகர்களுக்கும் சிறந்த டீசர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தப் படம் சிறப்பாக வர நடிகர் விஜய் தேவரகொண்டா தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சரியான கதையாக இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைக்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பைக் கையாள, கலை இயக்குநராக அவினாஷ் கொல்லா பணியாற்றுகிறார். ஜோமோன் டி.ஜான் மற்றும் கிரீஷ் கங்காதரன் இருவரும் ஒளிப்பதிவு செய்கின்றனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் பேனரில் இந்தப் படத்தை நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.

மே 30, 2025 அன்று திரையரங்குகளில் ‘கிங்டம்’ படம் வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு:-

எழுத்து இயக்கம் – கௌதம் தின்னனுரி
தயாரிப்பாளர்கள் – நாக வம்சி எஸ் & சாய் சௌஜன்யா
இசை – அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு – ஜோமோன் டி ஜான் ஐஎஸ்சி, கிரிஷ் கங்காதரன் ஐஎஸ்சி
படத்தொகுப்பு – நவீன் நூலி
தயாரிப்பு வடிவமைப்பு – அவினாஷ் கொல்லா
ஆடை வடிவமைப்பு – நீரஜா கோனா
நடனம் – விஜய் பின்னி
சண்டை – யானிக் பென், சேத்தன் டிசோசா, ரியல் சதீஷ்
தயாரிப்பு – சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் பேனரில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.