
“படத்தின் பெரும் பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இனி சில காட்சிகளும் ஒரு பாடலும் மட்டுமே படமாக்கப்படவுள்ளது. அதற்காகப் படக்குழுவினர் இந்த மாத இறுதியில் பூனே புறப்பட்டுச் செல்கின்றனர். படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று ஹிந்தியில் இடம்பெறுகிறது. அப்பாடலில் ராஜ்பரத்தையும் தேஜஸ்வினியையும் நடிக்க வைத்துப் படமாக்கப்பட்டுள்ளது. நெருக்கமான காட்சிகளைக் கொண்ட பாடலாகவும் அதேசமயம் மிக அழகாகவும் படமாக்கப்பட்டுள்ளது. டான்ஸ் மாஸ்டர் விஜி இதற்கு நடனம் அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் முகேஷின் ஒளிப்பதிவும், ஆர்ட் டைரக்டர் செந்திலின் அழகான அரங்க வடிவமைப்பும் படம் பார்ப்பவர்களைச் சொக்கவைக்கும்.
இது அடுத்த தலைமுறைக்கு சினிமாவைக் கொண்டு செல்லும் முயற்சி. இதில் மாற்று சினிமாவிற்கான முக்கிய கூறுகளோடு அழகியல் சார்ந்து புதிய பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறேன்.
இது முழுக்க முழுக்க எப்படி ஒரு கதைசொல்லி, கேட்பவர்களுக்கு சுவைப்பட கதை சொல்வானோ அது போன்ற ஒரு முயற்சி. இதை ”மேஜிக்கல் ரியலிசம்” என்று சொல்வார்கள். இதில் வரும் இடங்கள் அழகியல் தன்மையோடு இருக்கும். யதார்த்த வாழ்வில் நாம் இது போன்று பார்த்திராத வகையில் இருக்கும் உடைகள் எந்தவொரு நிலபரப்பையும் சாராத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சம்பவங்கள், கதாப்பாத்திரங்கள் புதிதானவர்கள். ஆனால் இவர்களின் வாழ்வு நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு.
அதைப்போலவே ஆந்திரா மெஸ் கதைசொல்லும் முறையும் இருக்கும்” என்றார் ‘ஆந்திரா மெஸ்’ படத்தின் இயக்குநர் ஜெய்.