Once Upon A Time In Madras – Hyperlink த்ரில்லர்
ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras) ஆகும்.
இப்படம் ஹைபர் லூப் வகைமையைச் சார்ந்த த்ரில்லராக உருவாகியுள்ளது. கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் கண்ணன், "படத்தில் எனக்கும் இயக்குநருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்தன. எனக்கு சரியெனப்படுவது அவருக்கு தப்பு; அவருக்குத் தப்புன்னுபடுறது எனக்கு சரியா இருக்கும். இப்படியும் ஒன்னு எடுத்துக்கோங்க எனச் சொல்லி அவர்...