Shadow

அந்த மூணு வார்த்தை

Moone Moonu Varthai

‘ஐ லவ் யூ’ – மூணே மூணு வார்த்தை.

‘ஐ ஹேட் யூ’ – மூணே மூணு வார்த்தைதான்.

‘ஹெள ஆர் யூ?’ -வும் மூணே மூணு வார்த்தைதான்.

மூணே மூணு வார்த்தை என்ற தலைப்பு நமக்குள் ஆர்வத்தை உருவாக்கும் ஓர் உன்னத தலைப்பு. காதலைக் குறிப்பிடும் படமாக இருக்குமோ என்ற ஆவலைத் தூண்டுகிறது.

கேபிடல் ஃபிலிம் வொர்க்ஸ் சார்பில் எஸ்.பி .பி. சரண் தயாரிக்கும் ‘மூணே மூணு வார்த்தை ‘ படத்தை இயக்குபவர் மதுமிதா. ‘வல்லமை தருவாயோ’, ‘கொலயா கொலயா முந்திரிக்கா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் வரவிருக்கும் மூன்றாவது படமாகும் ‘மூணே மூணு வார்த்தை’.

காதல் கலந்த நகைச்சுவைப் படமான இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் அர்ஜுன் சிதம்பரம். சுட்ட கதை மற்றும் இரண்டாம் உலகம் படங்களில் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வெங்கடேஷ் ஹரி நாதன் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். ஆதிதி செங்கப்பா கதாநாயகி ஆக அறிமுகமாகிறார். இந்தப் புத்துணர்ச்சி ஊட்டும் இந்த இளைய தலைமுறை நடிகர்களுடன் இணைந்து தங்களது அனுபவத்தை ஒருங்கிணைத்து நடிக்கின்றனர் எஸ்.பி. பாலசுப்ரமணியமும் லக்ஷ்மியும் . மூன்று தலைமுறையாக நடித்துக் கொண்டிருக்கும் தேசிய விருது பெற்ற லக்ஷ்மி பல வருடங்களுக்கு பிறகு நடிக்கும் படம் ‘ மூணே மூணு வார்த்தை’ என்பது குறிப்பிடத்தக்கது.

மூணே மூண் வார்த்தைபல்வேறு திறைமையான தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய ‘கேபிடல் ஃபிலிம் வொர்க்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்திலும் அந்தப் பணியைத் தொடர்கிறது. பிரபல ஒளிப்பதிவாளர் P.S.வினோத்தின் உதவியாளர் ஸ்ரீனிவாசன் வெங்கடேஷ் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் . கார்த்திகேய மூர்த்தி இசை அமைப்பாளராகவும், மணி கார்த்திக் கலை இயக்குநராகவும், கிரண் கண்டி படத்தொகுப்பாளராகவும் இந்தப் படத்தில் அறிமுகமாகின்றனர். ‘ஆஹா கல்யணம் ‘ படத்தின் மூலம் ஊடகங்கங்கள் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் பெயர் பெற்ற ராஜீவ் ராஜாராம் இந்தப் படத்தில் ஜம்போ என்ற மற்றொரு வசனகர்த்தாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். இந்த ஜோடி பல்வேறு பண்ணொளி விளம்பரங்கள் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .